குற்றம்செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

கைதடியில் வயோதிபப் பெண்ணை தாக்கி நகை கொள்ளை

சாவகச்சேரி மீசாலை ஐயா கடை சந்தியிலுள்ள வீடொன்றில் வயோதிபப் பெண் ஒருவரை மூர்க்கத்தனமாகத் தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (16) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் முன் கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் மூதாட்டியை மூர்க்கத்தனமாகத் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பத்தரை பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபா பணம் ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளையர்கள் முகமூடி மற்றும் கையுறையுடன் வீட்டுக்குள் நுழைந்து இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266