செய்திகள் பிரதான செய்தி

கைதிகளை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவது நிறுத்தம்!

சிறைக் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விளக்கமறியல் கைதிகளுக்கான அடுத்த வழக்கு திகதியை தீர்மானித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் காணொளி தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அரியாலையை சேர்ந்த நால்வர் கொரோனாவில் இருந்து நலம்!

Bavan

யாழ் மாநகர சபையின் முறையற்ற கழிவகற்றல்; மக்கள் விசனம்

கதிர்

பதவியேற்றார் உச்ச நீதிமன்ற நீதியரசர்

G. Pragas