செய்திகள்பிரதான செய்தி

கைதுக்கு தடை கோரிய ரிஷாட்டின் மனு நிராகரிப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றை கோரி ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

புவனெக அலுவிகாரே, பீ.தெஹிதெனிய மற்றும் எம்.துரைராஜா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு குறித்து விளக்கமளித்த சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரீன் புல்லே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை சிக்கலானது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மனுதாரரின் கோரிக்கைக்கு அமைவாக தடையுத்தரவு வௌியிடப்பட்டால் விசாரணை நடவடிக்கைகளை உரியமுறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு இடையூறு ஏற்படலாம் என சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, நீண்ட பரிசீலனையின் பின்னர் குறித்த மனு விசாரணைக்கு அனுமதி வழங்கும் அளவிற்கு போதுமான சட்ட ஏற்பாடுகள் வௌிப்படாததால் அதனை நிராகரிப்பதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051