செய்திகள் பிந்திய செய்திகள் பிராதான செய்தி

கொட்டகலை தீ விபத்தில் 12 வீடுகள் எரிந்து நாசம

கொட்டகலை, கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் இன்று (02) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 லயன் அறைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

சம்பவத்தின் போது வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

அதனையடுத்து திம்புள்ளை பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 1 மணித்தியாலயத்தின் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கு இரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.

இதன்போது 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், கொட்டகலை பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் திம்புள்ள பத்தனை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

கோத்தாவுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் – இருவருக்கு மறியல்

G. Pragas

அடம்ஸ் – விஜயகலா சந்திப்பு!

G. Pragas

நான்கு பந்தில் உலக சாதனை படைத்தார் மாலிங்க

G. Pragas

Leave a Comment