கொரோனாப் பெருந்தொற்று கற்பிணிகளுக்கு இனிமேல் வீட்டுச் சிகிச்சை இல்லை!

வீட்டில் இருந்து சிகிச்சைபெறும் திட்டத்துக்குள் இனி கர்ப்பிணிப் பெண்கள் பரிந்துரைக்கப்படமாட்டார்கள் என குடும்பநல பணியகம் முடிவு செய்துள்ளது.
இதற்கமைய கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகும் கர்ப்பிணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என பணியகத்தின் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை சுமார் 8 ஆயிரத்து 500 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 56 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சுமார் 95 வீதமான கர்ப்பிணித் தாய்மார்கள் குறைந்த பட்சம் ஒரு டோஸ் கொரோனாத் தடுப்பூசியை பெற்றுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version