உலகச் செய்திகள்

கொரோனாவால் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு ஈரானியர் உயிரிழப்பு!

ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு ஈரானியர் கொரோனா வைரஸினால் உயிரிழப்பதாக ஈரானிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 50 ஈரானியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவ‍ேளை ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 149 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகி 1,284 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நடவடிக்கைக்கு பங்களாதேஷ் வீரர்கள் நிதி உதவி!

Tharani

லண்டனில் பொதுமக்கள் மீது கத்திக்குத்து!

கதிர்

குற்றச்சாட்டுகளில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி விடுவிப்பு!

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.