உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

கொரோனாவின் உலகப் பலியெடுப்பு 577,962 ஆனது!

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, பிரேஷில், ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா, ஸ்பைன், பெரு மற்றும் இத்தாலி எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அழித்து வருகின்றது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று (14) இரவு 11 மணி வரை 213 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 13,341,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் 577,962 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7,788,210 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப்போது வரை 4,975,294 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் (Active Case) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இவர்களில் 59,148 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதன்படி மொத்தமாக அதிக உயிரிழப்புக்களை சந்தித்த நாடுகளாக,

 • அமெரிக்கா > 138,699
 • பிரேஷில் > 73,161
 • பிரித்தானியா > 44,968
 • மெக்சிகோ > 35,491
 • இத்தாலி > 34,984
 • பிரான்ஸ் > 30,029
 • ஸ்பெயின் > 28,409
 • இந்தியா > 24,315
 • ஈரான் > 13,211
 • பெரு > 12,054
 • ரஷ்யா > 11,614

காணப்படுகின்றன.

Related posts

காசநோயினால் அதிகமானோர் உயிரிழப்பு

reka sivalingam

அரிசி ஆலை உரிமையாளர்கள் இலாப நோக்கற்று சேவை செய்ய வேண்டும் – அரச அதிபர்

reka sivalingam

781 பேர் குணமடைந்தனர்; 767 பேர் தொடர் சிகிச்சையில்

G. Pragas