உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

கொரோனாவின் உலகப் பலியெடுப்பு 1,110,632 ஆனது!

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இந்தியா, பிரேஷில், ரஷ்யா, கொலம்பியா, ஸ்பைன் பெரு, மெக்சிகோ, பிரித்தானியா மற்றும் இத்தாலி எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அழித்து வருகின்றது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று (17) மாலை 8 மணி வரை 215 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 39,690,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் 1,110,632 பேர் உயிரிழந்துள்ளதுடன், 29,714,102 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப்போது வரை 8,866,036 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் (Active Case) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இவர்களில் 71,611 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதன்படி மொத்தமாக அதிக உயிரிழப்புக்களை சந்தித்த நாடுகளாக,

 • அமெரிக்கா > 223,730
 • பிரேஷில் > 153,229
 • இந்தியா > 113,165
 • மெக்சிகோ > 85,704
 • பிரித்தானியா > 43,429
 • இத்தாலி > 36,427
 • ஸ்பைன் > 33,775
 • பெரு > 33,648
 • பிரான்ஸ் > 33,303
 • ஈரான் > 30,123
 • கொலம்பியா > 28,616
 • ஆர்ஜன்டீனா > 25,723
 • ரஷ்யா > 24,002
 • தென்னாபிரிக்கா > 18,370
 • சிலி > 13,529
 • இந்தோநேசியா > 12,431
 • ஈகுவாடோர் > 12,357
 • பெல்ஜியம் > 10,359

காணப்படுகின்றன.

Related posts

கல்முனை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

G. Pragas

கல்வி வளர்ச்சியே மலையகத்தின் மாற்றம் – ராமேஷ்வரன்

G. Pragas

இடியுடன் கூடிய மழை பெய்ய சாத்தியம்?

Tharani