in ,

கொரோனாவுக்கு மேலும் நால்வர் சாவு!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (07) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

மரணித்தவர்கள் விபரம்,

கொழும்பு – மாளிகாவத்தையை சேர்ந்த 42 வயது பெண், இருதய நோயாளியான இவர் தன்னுடைய வீட்டில் மரணமடைந்தார்.

கொழும்பு – மாளிகாவத்தையை சேர்ந்த 69 வயது பெண், இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணித்தார்.

கொழும்பு – வெல்லம்பிட்டியை சேர்ந்த 67 வயது ஆண், இவர் வீட்டில் மரணித்தார்.

கம்பஹா – கனேமுல்லையை சேர்ந்த 88 வயது பெண், இவர் ஐடிஎச் தொற்று நோயியில் வைத்தியசாலையில் மரணித்தார்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 34 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட இருவர் இதுவரை தற்கொலை மற்றும் விபத்து காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய் வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று!

வாசகர்கள் மனதை வென்ற சஞ்சீவி பதிப்பு நாளைய தினம் !!