in , ,

கொரோனா:- இன்று யாழில் 7 – நாட்டில் 650

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் கேகாலை, குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் தொற்றாளர்களுடன் நேரடி தொடர்புடையவர்கள் என சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்.

இதேவேளை நாட்டில் இன்று இதுவரை 650 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

ரிஷாட் கைதுக்கு கஜேந்திரகுமார் கண்டனம்!

பன்னலயில் வெடி சம்பவம்; இருவர் படுகாயம்!