செய்திகள் பிரதான செய்தி

கொரோனா காரணமாக வளி மாசு தரம் உயர்வு!

கொரோனா காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் கொழும்பு நகரில் காற்று மற்றும் நீர் மாசு குறைவடைந்துள்ளது.

வாகனப் போக்குவரத்து குறைவடைந்தமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னரான நிலையுடன் ஒப்பிடுகையில் வளி மாசடைவு பாரியளவில் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி இப்போது வளி மாசு தரம் 56% ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் காற்று மாசு கடந்த நவம்பர் மாதத்தில் பாரியளவில் அதிகரித்துக் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆறுமுகம் தொண்டமானின் உடல் தீயில் சங்கமம்!

Tharani

வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால் நாடு துண்டாகும் – சிவாஜி

G. Pragas

தேரர்கள் மீதான வழக்கு சட்டமா அதிபரது உத்தரவில் இரத்து!

G. Pragas