கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

கொரோனா சந்தேக நபர் உட்பட 11 பேர் கைது!

திருகோணமலையில் 10 பேருடன் கடலுக்கு சென்று இரகசியமாக கரை திரும்பிய கொரோனா சந்தேக நபர் ஒருவர் உள்ளிட்ட11 பேரை இன்று (29) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் தனிமைப்படுத்தப்பட வேண்டிய ஒருவர் திருகோணமலை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற பின் இரகசியமாக மீண்டும் கரைக்குத் திரும்ப முயன்கிறார் என்று திருகோணமலை காவல்துறையினரால் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் கிழக்கு கடற்படை வீரர்கள் சந்தேகத்திற்கிடமான நபர் சென்ற படகை கண்டுபிடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதன் பின் குறித்த நபர் பயணித்த படகு உட்பட மேலும் இரண்டு படகுகளை சந்தேகத்தின் பேரில் கடற்படை கைது செய்துள்ளதுடன் படகுகளில் பயணித்த 10 நபர்களையும் கைது செய்து சம்பூர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பியுள்னர்.

அவர்கள் பயணித்த படகுகள் கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) பிரிவால் கிருமி நீக்கம் செய்யப்பட்டன.

Related posts

அரசாங்க ஊழியர்கள் சம்பிரதாய முறையிலிருந்து மாற வேண்டும்

Tharani

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்

Tharani

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்

reka sivalingam