in , ,

கொரோனா சாவின் பிடிக்குள் யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்கள்!

கொரோனா சாவின் பிடிக்குள் யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்கள்.ஒரே வாரத்தில் 97பேரை பலியெடுப்பு, சடலங்கள் எரிக்க முடியாமல் தேக்கம்!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்த மாதத்தின் முதல் 8 நாள்களில் உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரங்களிலிருந்து அறிய முடிகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 52பேரும், வவுனியா மாவட்டத்தில் 45பேரும் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாத் தொற்றால் வடக்கில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்த இரு மாவட்டங்களிலுமே அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே அந்த எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
முடக்கம் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் வழமைபோன்று நடமாட்டங்களில் ஈடுபடுகின்றனர். கொரோனாவின் ஆபத்தை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்று சுகாதாரத் தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை வவுனியா மாவட்ட மருத்துவமனையில் தினமும் 15 சடலங்கள் வரையில் சராசரியாக தேங்குவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் இதை ஒத்த நிலைமையே காணப்படுகின்றது.

ரூ. 2 ஆயிரம் கொடுப்பனவு யாழில் 9 ஆயிரம் பேருக்கு ‘தண்ணி காட்டுகிறது’ அரசு!

கொரோனாத் தொற்றால் மன்னாரில் இருவர் சாவு!