உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

கொரோனா சாவு; இலட்சம் தாண்டுகிறது!

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது இத்தாலி, ஸ்பைன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.

இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று (10) காலை வரை 210 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 95,751 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த கொரோனா தாக்கம் காரணமாக இதுவரை 1,605,277 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்ளில் 356,925 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது வரை 1,152,601 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி மொத்தமாக அதிக உயிரிழப்புக்கை சந்தித்த நாடுகளாக,

  • இத்தாலி > 18,279
  • அமெரிக்கா > 16,697
  • ஸ்பெயின் > 15,447
  • பிரான்ஸ் > 12,210
  • பிரித்தானியா > 7,978
  • ஈரான் > 4,110
  • சீனா > 3,336
  • ஜேர்மன் > 2,607

காணப்படுகின்றன.

Related posts

பயங்கரவாத அமைப்பின் 11 உறுப்பினர்கள் ரிஐடியிடம்

G. Pragas

இளையோருக்கு இலவச சுயதொழில் வாய்ப்பு!

G. Pragas

காணாமல் போன மூதாட்டி மரணம்!

G. Pragas