உலகச் செய்திகள் செய்திகள்

“கொரோனா தாக்கத்தை உறுதி செய்ய போதுமான கருவிகள் இல்லை” – அமெரிக்கா

அமெரிக்காவின் இரு கடலோர பகுதிகளிலும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யும் சோதனை கருவிகள் போதுமான அளவு கைவசம் இல்லை என்பதை வெள்ளை மாளிகை ஏற்றுக்கொண்டுள்ளது.

தற்போது தமது நாட்டுக்குத் தேவைப்படும் 10 லட்சம் கொரோனா வைரஸ் சோதனை கருவிகளை இந்த வாரத்துக்குள் தயாரிக்க இயலாது என்று அமெரிக்காவின் துணை அதிபரான மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரம் பேரை கடந்துள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 3,042 பேர் இறந்துள்ளதாகவும், இரண்டாவது நாளாக அதிகரித்து வரும் பாதிப்புகளால் மேலும் 30 பேர் இறந்துள்ளதாகவும் ஏஎபி முகமை குறிப்பிட்டுள்ளதை ஏஎன்ஐ செய்தி முகமை மேற்கோள் காட்டியுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள், அதாவது கிட்டதட்ட 80,000க்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டு இறுதியில் இந்த வைரஸ் பாதிப்பு தொடங்கிய சீனாவை சேர்ந்தவர்கள் ஆவர். உலக அளவில் இந்நோய்த்தொற்றால் 3,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

Related posts

பாடசாலைகளின் கல்விச் சுற்றுலாக்கள் இடை நிறுத்தம்!

Bavan

விக்னேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடு!

reka sivalingam

குப்பை மேட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு தடை!

G. Pragas

Leave a Comment