செய்திகள் பிரதான செய்தி

கொரோனா நோய் தொற்று ; மக்களுக்கு அறிவுறுத்தல்

மக்கள் ஒன்று கூடுவதால் கொரோனா வைரஸ்ஸின் பரம்பல் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய அளவில் மக்கள் ஒன்று கூடல்களை முற்றாக தவிர்க்குமாறு அறிவுறுத்தபட்டிருக்கின்ற அதேவேளை நாட்டில் தற்போது
ஏற்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று தொடர்பாக வடமாகாண ஆளுநர் செயலகம் பின்வரும் விடயங்கள் தொடர்பிலான ஆலோசனைகளை பொது மக்களின் கவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.


 திருமண வைபவங்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளை நடாத்துவதாயின்
அவர்களின் பிரிவிற்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு
முன்னறிவித்தல் வழங்கி அவர்களின் ஆலோசனைகளை
அறிவுறுத்தல்களையும் பெற்றுக்கொள்ளல்.


 மக்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்து குறைந்த
எண்ணிக்கையானவர்களுடன் நிகழ்வுகளை நடாத்துவதனையும் உரிய சுகாதார
நடைமுறைகளை பின்பற்றுவதனையும் இவற்றிற்கு ஏற்பாடு செய்பவர்கள்
பொறுப்பாக இருத்தல் வேண்டும்


 தேசிய அளவிலான ஏற்பாடுகளுக்கிணங்க அடுத்து வரும் இரு வார
காலபகுதிக்கு ஆலயங்களில் நடைபெறும் அன்னதான வைபவங்கள் மற்றும்
பொதுமக்கள் ஒன்றுகூடும் சமய வைபவங்கள் எதனையும் மேற்கொள்ளாது
இயன்றவரை தவிர்ப்பதை ஆலய நிர்வாக சபையினர் உறுதிபடுத்திகொள்ளல்.


இக்கால பகுதிகளில் ஆலயங்களில் வருடாந்த திருவிழா மற்றும் முக்கிய
சமய நிகழ்வுகள் எதனையும் நடாத்த வேண்டி இருப்பின் அதுகுறித்து பொது
சுகாதார வைத்திய அதிகாரி,கிராம சேவகர் மற்றும் உரிய பிரிவுக்கு
பொறுப்புடைய பொலிஸ் அதிகாரியுடன் தொடர்புகொண்டு ஆலோசனை
பெற்று அதற்கமைவாக இதனை மேற்கொள்ளல்.

அவசியம் ஏற்படின் மிகவும் குறைந்த எண்ணிக்கையான மக்களுடன் இச்சமய நிகழ்வுகளை மேற்கொள்வதனை ஆலய நிர்வாக சபையினர் கவனித்தல்.
போன்றவற்றை கொரோனா அச்சுறுத்தல் நீடிக்கும் வரை இயன்றவரை
கடைப்பிடிக்குமாறு தெரிவிக்கபட்டுள்ளது.


கொரோனா வைரஸின் நோய் தீவிரத்தன்மையை எல்லோரும் நன்கறிந்து
வடமாகாணத்தினையும் பாதுகாக்க அதாவது வருமுன் காக்க எல்லோரும்
பொறுப்புணர்வுடனும், சுய ஒழுக்கத்துடனும் சூழ்நிலைக்கேற்ப ஆரோக்கியமான
தற்பாதுகாப்பு பழக்கவழக்கங்களுடனும், சமூகப்பொறுப்புடைய நடைமுறைகளுடனும் நடந்துகொள்ள வேண்டும் எனவும் வடமாகாண ஆளுநர் செயலகம் அனைவருக்கும் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

சிறுதானிய ஏற்றுமதி செய்கையாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை

கதிர்

ஜனவரி 14ம் திகதியோடு முடிவிற்கு வருகிறது வின்டோஸ் 7

Tharani

இன்றைய நாள் இராசி பலன்கள்

Tharani