செய்திகள்

கொரோனா மாத்திரை இறக்குமதி ஒத்திவைப்பு!

கொரோனா தடுப்பு மாத்திரைகளை இறக்குமதி செய்வதை இலங்கை அரசு தாமதப்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாத்திரை முன்னர் அறிவிக்கப்பட்டதை விடவும், மருத்துவனையில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் இறப்புக்களைக் குறைப்பதில் போதியளவு செயல்திறன் அற்றது என்று கூறப்படுகின்றது.

ஆயிரத்து 433 நோயாளிகளிடம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்த மாத்திரையானது மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகளில் 30 சதவீதக் குறைப்பைக் காட்டியது என்று மருந்து தயாரிப்பாளர் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்ரோபர் மாதத்தில் 775 நோயாளிகளின் தரவுகளின் அடிப்படையில் சுமார் 50 சதவீத செயல்திறனைக் காட்டியது. இந்த மருந்தின் செயல்திறன் இதற்கு முன்னர் 70 சதவீதமாக இருந்து என்று இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

மாத்திரையின் செயல்திறன் தொடர்பிலான ஆய்வை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்று தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தொழில்நுட்பக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தொழிநுட்பக் குழு மற்றும் நிபுணர்களின் நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையிலேயே மாத்திரையை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,939