கிழக்கு மாகாணம் செய்திகள்

கொரோனா வைரஸை அகற்ற கைகழுவும் திரவ இயந்திரம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அரச திணைக்களங்களில் விசேட நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

இந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு கட்டாரில் வாழும் ஏறாவூர் மக்களின் கட்டார் சமூக சேவைகள் அமைப்பு மூலம் கை கழுவும் திரவ இயந்திரம் இன்று (02) வழங்கி வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு சேவை பெறும் நோக்கில் வரும் மக்கள் மற்றும் செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு கருதி கை கழுவும் திரவ இயந்திரம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத்திடம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் பிற்பாடு செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கைகளை கழுவி தங்களது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்கின்றனர். (150)

Related posts

காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பிறகு பாடசாலைகள் திறப்பு

reka sivalingam

எமது காணியை மீட்டுத் தரும் வேட்பாளருக்கே ஆதரவு!

G. Pragas

கன்னியா வென்னீரூற்று சிங்கள மயமாகிறது

கதிர்