செய்திகள் பிரதான செய்தி

கொரோனா குறித்து சஜித் விடுத்துள்ள அறிவிப்பு…!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

விசேடமாக, இத்தாலி, தென் கொரியா, ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் பிரஜைகள் தொடர்பில், ஒரு நாடு என்ற வகையில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த நாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து, இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக தலையீடு செய்ய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளியுறவு அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, தூதரகங்கள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன ஒன்றிணைந்து அவர்கள் குறித்து விசேட வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் உள்ள அவர்களது குடும்பம் தொடர்பிலும், இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த பேரழிவு சூழலில் இலங்கையில் இருக்கும் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை போன்று வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பிரஜைகளையும் கைவிடாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

புலிகள் கோரியதை தான் கூட்டமைப்பு முன்வைக்கின்றது

G. Pragas

தூதரக அதிகாரி கடத்தல்; சார்பற்ற விசாரணையை கோருகிறது – ம.உ.ஆ

reka sivalingam

தமிழரசு கட்சியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மர நடுகை

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.