செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம்: ரணில் விடுக்கும் அறிவிப்பு…!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று (04) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை வங்கித்துறையை பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் வங்கி நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்படக்கூடாது எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே தனியார் துறை ஊழியர்களுக்கு ஏனைய நாடுகளில் நிவாரணம் வழங்கும் திட்டம் ஏனைய நாடுகளில் செயற்படுவதாகவும் எனவே அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். 

Related posts

பெரஹராவினால் கொழும்பு வீதிகளுக்கு பூட்டு

G. Pragas

தொழில் திணைக்களத்தின் சேவைகள் நிறுத்தம்

Tharani

தமிழர்கள் கடத்தல் -கடற்படை வீரர்களுக்கு மறியல்

G. Pragas