உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

கொரோனா வைரஸ் தாக்கம்; 11,000 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு- WHO

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பாவினை தொற்று நோய் மையமாக அடையாளப்படுத்தப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச ரீதியில் , இதுவரை 11 ஆயிரத்து 384 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 லட்சத்து 75 ஆயிரத்து 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தின் காரணமாக, இன்று (21) தொடக்கம் போக்குவரத்து சேவைகளை இடைநிறுத்துவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று தொடக்கம் எதிர்வரும் 14 நாட்களுக்கு பேருந்து, உள்நாட்டு விமான சேவை உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மழைவீழ்ச்சி இன்மையால் மின்சாரம் பாதிப்பு

Tharani

சிறுமி பலியான சம்பவம்; வைத்தியர் உட்பட மூவருக்கு பிணை!

G. Pragas

கலைகளின் வளர்ச்சிக்காக உதவி – ஜனாதிபதி

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.