செய்திகள் பிந்திய செய்திகள்

கொலைக் குற்றவாளிகளை 12 மணி நேரத்தில் கைது செய்த பொலிஸார்

பாதாள குழுக்­க­ளி­ன் பழி தீர்க்கும் படலத்தின் ஒரு பகுதியாக நேற்று முன் தினம் இரவு ஹங்வெல்லை நகரில் எம்­புல்­கம சந்தியில் ஒருவர் சுட்டும் வெட்­டியும் படுகொலை செய்யப்பட்­டார். இதன்­போது குறித்த சந்தியில் வடை வர்த்­தகம் செய்யும் அப்­பாவி தமிழ் இளைஞர் ஒரு­வரும் பாதாள குழுவுடன் தொடர்­பு­டைய இலக்கு வைக்கப்பட்ட பிரதான நபரும் படுகாயமடைந்துள்­ளனர்.

மூன்று கொலைகள், ஒரு கொலை முயற்சி, நவ­க­முவ பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கு மரண அச்­சு­றுத்தல் விடுத்த சம்­ப­வங்கள் தொடர்பில் விளக்­க­ம­றியல் உத்­த­ரவின் கீழ், அங்­கு­கொ­ல­பெ­லஸ்ஸ சிறையில் உள்ள பாதாள உலகக் குழு­வொன்­றினை வழி நடாத்தும் தினித் மெவன் மாபுல என்ற ஊறு­ஜுவா இந்த தாக்­கு­தலை வழி நடத்­தி­யுள்­ளமை விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதன்­படி தாக்­கு­தலை நடத்­திய சந்­தேக நபர்கள் 7 பேரில் உள்­ள­டங்கும் ஐவ­ரையும், தாக்­கு­த­லுக்கு உதவி ஒத்­தாசை வழங்­கிய ஒரு­வ­ரையும் 12 மணி நேரத்­துக்குள் பொலிஸார் கைது செய்து மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இந்த சம்­ப­வத்தில் மற்­றொரு பாதாள உலக குழுவை வழி நடத்­திய இந்­துனில் வஜிர குமா­ர­வையே இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் படு­கா­ய­ம­டைந்து கொழும்பு வைத்­தி­ய­சா­லை­யிலும், காய­ம­டைந்த அப்­பாவி இளை­ஞ­ரான 27 வய­தான பால­சுப்­ர­ம­ணியம் ஜீவன் அவி­சா­வளை வைத்­தி­ய­சா­லை­யிலும் சிகிச்சை பெறு­வ­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

ஹங்­வெல்லை பொலிஸ் நிலை­யத்தில் நேற்று வி‍சேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்­றினை அவர் நடத்­திய நிலையில் இது குறித்த தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினார். அதன்­படி குறித்த சம்­பவம் சுருக்­க­மாக வரு­மாறு:
‘ஹங்­வெல்ல – எம்­புல்­கம சந்­திக்கு இருவர் நேற்று காரில் வந்­துள்­ளனர். அவர்கள் காரி­லி­ருந்து இறங்கும் போது, சிறிய ரக வேன் ஒன்­றிலும் இரு மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் வந்த குழு­வொன்­றினால் துப்­பாக்கிச் சூடும் வாள் வெட்டும் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­போது, 23 வய­தான சுரேஷ் ருவந்த குண­சிங்க எனும் இளைஞர் படு காய­ம­டைந்த நிலையில் நவ­க­முவ வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­படும் போது உயி­ரி­ழந்­துள்ளார். காரை செலுத்தி வந்த பாதாள உலக குழு தலைவன், 26 வய­தான இந்­துனில் வஜிர குமார படு காய­ம­டைந்து ஹோமா­கம வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்ளார். பல கொலை குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு இலக்­கா­கி­யுள்ள இவர் கடந்த இரு மாதங்­க­ளுக்கு முன்­ன­ரேயே பிணையில் வெளியே வந்­துள்ளார்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே சம்­பவம் இடம்­பெற்ற சந்­தியில் வடை விற்கும் அப்­பாவி இளைஞர் ஒரு­வரும் சம்­ப­வத்தில் காய­ம­டைந்து அவி­சா­வளை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

நேற்று முன்தினம் இரவு 8.30 இற்கு இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் நுகே­கொடை சட்ட அமு­லாக்கல் பிரிவு மற்றும் மேல் மாகாண தெற்கு குற்­றத்­த­டுப்புப் பிரிவு ஆகி­ய­வற்றின் உத­வி­யுடன் ஹங்­வெல்லை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இதன்­போது, நவ­க­முவ பொலி­ஸா­ருக்கு சந்­தேக நபர்கள் பய­ணித்த வேனின் இலக்கம் தொடர்பில் தகவல் கிடைத்­துள்­ளது. அது ஹங்­வெல்லை பொலி­சா­ருக்கு பரி­மாற்­றப்­பட்டு வேனின் உண்மை உரி­மை­யாளர் கண்­ட­றி­யப்­பட்­டுள்ளார். கொலன்ன பகு­தியைச் சேர்ந்த பெண் ஒரு­வரே அவ்­வேனின் உரி­மை­யாளர் என்ற நிலையில் கொலன்ன பொலிஸார் அப்­பெண்ணின் முக­வ­ரியில் சென்று விசா­ரித்­துள்­ளனர்.

இதன்­போது, அப்பெண் வீட்டில் இருக்­காத நிலையில் அவ­ரது கணவர் பதி­ல­ளித்­துள்ளார். இற்­றைக்கு ஒன்­றரை மாதங்­க­ளுக்கு முன்னர் அந்த வேனை 40 ஆயிரம் ரூபா மாத வாடகை அடிப்­ப­டையில் பிய­கம பகு­தியில் வாகன வாடகை நிறு­வனம் ஒன்­றுக்கு கைய­ளித்­த­தாக அவர் கூறி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து பிய­கம பொலி­ஸா­ருடன் ஹங்­வெல்லை பொலிஸார் பிய­க­மவில் உள்ள குறித்த வாகன வாடகை நிறு­வ­னத்­துக்கு சென்று விசா­ரித்­துள்­ளனர். குறித்த வேன் நேற்று முன்தினம் காலை 10 ஆயிரம் ரூபா முற்­பணம் செலுத்­தப்­பட்டு 3000 ரூபா நாள் வாடகை அடிப்­ப­டையில் பெறப்­பட்­டுள்­ளது. வேனை பெற்­றவர், சந்­தேக நபர்­களில் ஒரு­வரின் சகோ­த­ரனின் அடை­யாள அட்­டையை சமர்ப்­பித்தே வேனைப் பெற்­றுள்ளார். இந்த தக­வல்­க­ளுக்கு மேல­தி­க­மாக, அந்த வேனில் ஜீ.பி.எஸ். தொழில் நுட்பம் இணைக்­கப்­பட்­டுள்­ள­மை­யையும் பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

இத­னை­ய­டுத்து விசா­ர­ணைகள் ஜீ.பீ.எஸ். தொழில் நுட்பம் ஊடே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.அதன்­படி, குறித்த வேன், தலங்­கம பொலிஸ் பிரிவில் குமா­ரகே வத்த பகு­தியில் கட்­டப்­பட்டு வரும் இரு மாடி வீடொன்­றுக்கு முன்­பாக இருப்­பதை பொலிஸார் கண்­ட­றிந்­தனர். அங்கு சென்ற பொலிஸார், அந்த வீட்டில் பிர­தான மேஸ்­தி­ரிக்கு கையு­த­வி­யா­ளர்­க­ளாக இருந்த இரு­வரைக் கைது செய்து விசா­ரித்த போது, அதில் ஒருவர் கொலை­யுடன் நேர­டி­யா­கவும் மற்­றை­யவர் அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­துள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து அவ்­வேனை மீட்ட பொலிஸார், அங்கு உதவி ஒத்­தாசை புரிந்த நப­ரிடம் இருந்து தப்பிச் செல்ல பயன்­ப­டுத்­திய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்­கி­ளொன்­றி­னையும் மீட்­டனர். ஜல்­தர, ரணால பகு­தியைச் சேர்ந்த சமில நிஷாந்த, ரணில் அல்­மேதா ஆகிய சந்­தேக நபர்­களே கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர்.

இத­னி­டையே, பொலிஸ் வி‍சேட அதி­ரடிப் படை­யி­ன­ருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில், கடு­வலை நகர சபைக்கு அருகில் உள்ள பெரேரா குறுக்கு வீதியின் அருகில் உள்ள பாழ­டைந்த இடத்தில் இருந்து இக்­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய மேலும் இருவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இரா­ணு­வத்­தி­லி­ருந்து தப்பி வந்த ஜல்­தர, ரணால பகு­தியைச் சேர்ந்த கயான் மது­சங்க அத்­த­நா­யக்க, என்ப­வரும் நயன குமார முண­சிங்க என்­ப­வ­ருமே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர். கயா­னி­ட­மி­ருந்து 9 மில்லி மீற்றர் ரக தோட்­டாக்கள் பயன்­ப­டுத்தத் தக்க உள் நாட்டு தயா­ரிப்பு ரிவோல்வர் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. மூன்று தோட்­டாக்­களும் ஒரு வெற்றுத் தோட்­டாவும் இதன்­போது கிடைத்­துள்­ளன. மற்­றை­ய­வ­ரி­ட­மி­ருந்து கொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட கூரிய ஆயு­தங்கள் சில மீட்­கப்­பட்­டுள்­ளன.

இத­னை­ய­டுத்து அதி­ரடிப் படை­யினர் அவர்­க­ளிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் கொலை­யுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்ட மேலும் இருவர் தொடர்பில் தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 18 வயதுடைய சானுக சாலிந்த சில்வா, தொன் நதுன் சானக ரத்நாயக்க ஆகிய குறித்த இருவரையும் அதிரடிப் படையினர் தொம்பே, பலலகம பகுதியில் வைத்து நேற்று நண்பகல் கைது செய்தனர்.

அதன்படி இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை பிரதான சந்தேக நபர்கள் 5 பேரும் உதவி ஒத்தாசை வழங்கிய ஒருவருமாக அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலையுடன் நேரடியாக 7 பேர் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேரடியாக தொடர்புபட்ட மேலும் இருவரும் உதவி ஒத்தாசை புரிந்த ஏனையோரையும் கைது செய்ய வி‍சேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

யாழ் பல்கலைக்கு தகுதியான துணைவேந்தரை தேட குழு நியமனம்!

Tharani

தீவக குடிநீர் பிரச்சினை; கனடாவுடன் பேசிய டக்ளஸ்

G. Pragas

ஹம்றா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

G. Pragas