in ,

கொலை முயற்சியில் இருந்து மீண்ட ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு சிறை!

விஷம் கலந்த தேநீரை அருந்தி ஆபத்தான நிலையில் ஜேர்மனில் சிகிச்சை பெற்று மரணத்தில் இருந்து மீண்ட ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெஸ்சி நவல்னிக்கு புடின் அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டிய வழக்கில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷ்யாவின் மொஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அரசின் செயற்பாடுகளை அலெக்ஸி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு விமானத்தில் பயணித்த அவர் தேநீர் அருந்திய நிலையில் மயக்கம் அடைந்தார். பின்னரே அவர் விஷம் அருந்தியமை அறியவந்தது. ஆபத்தான நிலையல் ரஷ்யாவில் இருந்து ஜேர்மன் கொண்டு செல்லப்பட்டு நவல்னி காப்பாற்றப்படார்.

முன்னதாக விஷம் அருந்தி நவல்னி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அது கொலை முயற்சி என்று தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் மரணத்தில் இருந்து மீண்டு ரஷ்யா திரும்பிய நவல்னி கைது செய்யப்பட்டார்.

2014ம் ஆண்டு விதிக்கப்பட்ட மூன்றரை ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை தொடர்பான, வழக்கின் விதிமுறைகளை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி குறித்த ஒத்திவைக்கப்பட்ட தண்டனையை உடன் அமுலாகும் சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. முன்னர் நவல்னி 11 மாதங்கள் வீட்டுக்காலில் வைக்கப்பட்டதை கருத்தில்கொண்ட நீதிமன்றம் அத்தண்டனையை 2 ஆண்டுகளும் 8 மாதங்களும் சிறையில் அனுபவிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

இதையறிந்த அவரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அலெக்ஸியை விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது!!

இதுவரை 2,900 பேர் கைது!