கொழும்பில் மேலும் ஜவருக்கு டெல்டா தொற்றுறுதி!

கெஸ்பேவ பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையின் 5 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸின் டெல்ட்டா திரிபு தொற்றியிருக்கலாம் என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளரும் பிரதி சுகாதார சேவை பணிப்பாளருமான ஹேமந்த ஹேரத் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சமீப காலமாக கெஸ்பேவ பகுதியில், ஏராளமான கொரோனா நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு தொடர்ந்து பீ.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவற்றில் சந்தேகத்திற்கிடமான சில இரத்த மாதிரிகளை மேலதிக பரிசோதனைக்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version