செய்திகள் பிராதான செய்தி

கொழும்புத் தோட்டத்தில் தீயினால் 13 வீடுகள் நாசம் – 28 குடும்பங்கள் பாதிப்பு

நுவரெலியா – மஸ்கெலியா பொலிஸ் பிரிவு, சாமிமலை, கொழும்பு தோட்டத்தில் 28 வீடுகள் அடங்கிய குடியிருப்புத் தொகுதியில் இன்று (20) காலை 9 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது தீ விபத்தில் 13 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் 28 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளன.

இத் தீ பரவலை அயலவர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அப்பகுதி கிராம சேவகர் தெரிவித்ததுடன் இத் தீ மேலும் பரவும் எ பட்சத்தில் பாரிய சேதம் ஏற்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் அப்பகுதிக்கு சென்ற மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்குடியிருப்புகளில் வசித்து வந்த 140 பேரில் 29 பாடசாலை மாணவர்களும் 28 தொழிலாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது தோட்ட ஆலய மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.

Related posts

தேசியக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார் ரணில்

G. Pragas

இலஞ்சம் பெற்ற இலஞ்ச பிரிவு பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் பணி நீக்கம்

G. Pragas

கட்சி விதிகளை மீறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கதிர்

Leave a Comment