செய்திகள்

சுதந்திர சதுக்கத்தில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலம்!

கொழும்பு – 7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் துப்பாக்கி சூட்டில் மரணித்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டியில் தற்காலிகமாக வசித்த 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் சடலத்தின் அருகே 9எம்எம் பிஸ்டலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மரண தண்டனை விதிக்கப் பெற்ற சர்பயா விடுதலை

G. Pragas

பொருளாதார மத்திய நிலையத்துக்கு பூட்டு!

Bavan

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் மட்டுவில் 4 முறைப்பாடுகள் பதிவு!

G. Pragas