செய்திகள் பிரதான செய்தி வணிகம்

கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்; ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

கொழும்பு பங்குச்சந்தையின் இன்றைய பரிவர்தனை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

S&P SL 20 சுட்டெண் 5.04 வீதத்தால் குறைவடைந்ததன் காரணமாக பரிவர்தனை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு பங்குச்சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் இந்த வாரத்தில் மூன்றாவது தடவையாகவும் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று காலை முதல் ஆசிய பங்குச்சந்தைகள் பல கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

ஜப்பானில் நிக்கி குறியீட்டு எண் இன்று 8.5 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஹாங்காங்கில் ஹாங் செங் 5.8 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், சீனாவின் பங்கு சந்தையும் 3.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Related posts

சுற்றாடல் பொலிஸ் பிரிவுக்கு மோட்டார் சைக்கிள்கள்

Tharani

துறைமுக அதிகார சபைத் தலைவராக முன்னாள் தளபதி

reka sivalingam

பழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்!

G. Pragas