செய்திகள் வணிகம்

கொழும்பு பங்கு சந்தை அதீத வளர்ச்சி

இலங்கையின் அரச தலைவர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றியீட்டியதனை தொடர்ந்து நடைபெறும் முதலாவது நாள் பங்கு வர்த்தகத்தில் கொழும்பு பங்கு சந்தை தொடங்கிய அரை மணிதிலங்களினுள் 100 புள்ளிகளால் உயர்வடைந்து வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

இன்றைய (18-11-2019) பங்கு சந்தை ஆரம்பத்தில் 6,023.02 புள்ளியாக காணப்படட அனைத்து பங்கு விலைச்சுட்டி (ASPI ) இன்று காலை 10 மணியளவில் 102 புள்ளிகளால் உயர்வடைந்து 6,125.22 புள்ளியாக உயர்வடைந்தது . மேலும் இன்றைய பங்கு பரிவர்த்தனை ஆரம்பத்தில் 2,986.52 புள்ளியாக காணப்பட்ட ஸ்டாண்டர்ட் அண்ட் போர்ஸ் விலைச்சுட்டி (S&P SL20) 62.22 புள்ளிகளால் உயர்வடைந்து 3,048.84 என்ற புள்ளியையும் எட்டியது.

Related posts

43 ஆண்டுகள் விடுமுறை பெறாமல் சேவையாற்றிய பொலிஸ் அதிகாரி

G. Pragas

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் – (7/12)

Bavan

இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்: மத்திய கிழக்கை சேர்ந்தவர்கள் பதிவு

Tharani