in ,

கொவிட் தொற்றால் இந்திய நட்சத்திர மெய்வல்லுநர் மில்கா சிங் மரணம்

இந்தியாவின் முன்னாள் நட்சத்திர மெய்வல்லுநர் மில்கா சிங் 91ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘பறக்கும் சிக்’ என புகழ்பெற்ற மில்கா சிங், ஆசிய விளையாட்டு விழாவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

டோக்கியோ 1958 ஆசிய விளையாட்டு விழாவில் 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் ஜகார்த்தா 1962 ஆசிய விளையாட்டு விழாவில் 400 மீற்றர் மற்றும் 4×400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் மில்கா சிங் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

ரோம் 1960 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 400 மீற்றர் இறுதிப் போட்டியில் 4ஆம் இடத்தைப் பெற்றார்.

மில்கா சிங்கின் மெய்வல்லநர் வாழ்க்கை பொலிவூட் திரை உலகில் 2013இல் பாக் மில்கா பாக் (ஓடு மில்கா ஓடு) என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டிருந்தது.

மில்கா சிங்கின் மனைவி, முன்னாள் கரப்பந்தாட்ட அணித் தலைவியான நிர்மல் கோரும் இந்த வார முற்பகுதியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

கொரோனா தொற்றினால் கடந்த மாதம் பாதிக்கப்பட்ட மில்கா சிங், தொற்றின் பிந்தைய தாக்கங்களினால் சண்டிகார் நகரில் கடந்த வெள்ளியன்று உயிரிழந்தார்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் விளையாட்டுத் துறையில் முதலாவது சுப்பர் ஸ்டார் என பெயர் பெற்ற மில்கா சிங்குக்கு பிரதமர் நரேந்தர மோடி தனது அஞ்சலியுடன் கூடிய ஆழ்ந்த அனுதாபத்தைத் செலுத்தினார்.

மக்கள் பொருளாதார பலம் பெறுவதை சுயலாப சக்திகள் விரும்பவில்லை

சாவகச்சேரி பிரதேச செயலக வீட்டுத்திட்ட தெரிவுகளில் மோசடிகள்