கொவிட் மரணம்; அறிக்கையிடும் முறைக்கு மாற்றம்

இன்று முதல் கடந்த 48 அல்லது 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற அனைத்து மரணங்களையும் அன்றைய தினத்திலேயே அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இதன்படி, இதற்கு முன்னர் அறிக்கை இடப்பட்ட கடந்த தினங்களின் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை புதிய பொறிமுறையின் கீழ் அறிக்கை இடப்படாது என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இதற்கு முன்னர் எம்மால் கடந்த தினங்களில் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை அறிக்கை இடப்பட்டது. எனினும் நாம் இன்று முதல் கடந்த 48 மணித்தியாலங்களில் பதிவான கொவிட் மரணங்கள் அனைத்தையும் அன்றைய தினத்திலேயே வௌியிட தீர்மானித்துள்ளோம்.

இதன்படி, நாள் ஒன்றில் ஏற்படும் அனைத்து கொவிட் மரணங்களையும் அன்றைய தினமே வௌியிட புதிய பொறிமுறை ஒன்றை தயாரித்துள்ளோம்.

இதற்கமைய கடந்த 48 மற்றும் 24 மணித்தியாலங்களினுள் இடம்பெறும் கொவிட் மரணங்களை அன்றைய தினத்திலேயே அறிக்கையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version