செய்திகள் பிரதான செய்தி

கொவிட்-19; வட மாகாண மருத்துவ மன்றத்தின் ஊடக அறிக்கை

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பல உலக நாடுகளில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திய நிலையில் தற்போது இலங்கையிலும் வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாதிப்புக்கள் பெருமளவில் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு அனைத்துத் தரப்புக்களினதும் ஒத்துழைப்பு மிக அவசியமானது. தொற்று நோய் தொடர்பான தேவையற்ற பயங்களைத் தவிர்த்து சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றின் இந்த சவாலை இவகுவாக வெற்றிகொள்ளலாம்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படினும் பயம் கொள்ள தேவையில்லை. சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனைகள் பெறப்படின் உயிரிழப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளலாம். தொற்றுநோய்க் கட்டுப்பாட்டினை திறம்பட மேற்கொள்ள பொதுமக்கள் அனைவரது பங்களிப்பினையும் வேண்டி நிற்கிறோம்.

குறிப்பாக வடமாகாணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல உலக நாடுகளிலிருந்தும் பெருமளவானோர் வருகை தருகிறார்கள். எனவே தடுப்பு நடவடிக்கைகளை தகுந்த முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் ஆனது தொற்றுள்ள ஒருவரிடமிருந்து இருமும் போதோ அல்லது தும்மும் போதோ வெளிவரும் சுவாச நீர்துளிகள் மூலமோ அல்லது தொற்று உள்ள ஒருவர் கையாண்ட பொருட்கள், மேற்பரப்புக்களைத் தொடும் போதோ பரவலடைகிறது.

Related posts

பால்மா விலைகுறைப்பு

reka sivalingam

மணல் அகழ்பவர்களை கைது செய்து மன்றில் நிறுத்துங்கள்: சுமந்திரன்

Tharani

மீன்பிடி கைத்தொழில் குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவுறுத்தல்

G. Pragas

Leave a Comment