கோடை காலம் கோழிகளுக்கு சாபம்

கோடை­கா­லத்­தில் ஏற்­ப­டும் அதி­க­ரித்த வெப்­பம் கார­ண­மாக கோழி­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டு­கின்­றன. கோழி­க­ளுக்கு உகந்த உச்ச பட்ச சூழல் வெப்­ப­நி­லை­யாக 3௦-32 செல்­சி­யஸ் அள­வி­லேயே காணப்­பட வேண்­டிய போதும் இலங்கை போன்ற நாடு­க­ளில் வரு­டம் முழு­வ­தும் அதனை விட அதி­க­ரித்த வெப்­ப­நிலை காணப்­ப­டு­வது அண்­மைக் காலத்­தில் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. உலக வெப்­ப­மு­று­த­லின் தாக்­க­மாக இத­னைக் கருத முடி­யும். எனவே கோடை காலம் மட்­டு­மின்றி வரு­டம் முழு­வ­தும் கோழி­களை வெப்ப அயர்ச்­சி­யில் இருந்து பாது­காக்க வேண்­டிய தேவை கோழிப் பண்­ணை­ யா­ளர்­க­ளுக்கு ஏற்­ப­டு­கி­றது. சரா­ச­ரியை விட சூழல் வெப்­ப­நிலை அதி­க­ரிக்­கும் போது கோழி­கள் அசெ­ள­க­ரி­யத்தை சந்­திக்­கின்­ற­தோடு அதி­க­ள­வில் இறக்­க­வும் செய்­கின்­றன.

அதி­க­ரித்த வெப்­ப­நிலை கார­ண­மாக கோழி­க­ளில் உடல் எடை குறை­தல், இறைச்­சி­யின் தரம் குறை­தல், முட்­டை­யின் தரம் குறை­தல், முட்டை உற்­பத்தி குறை­தல், இனப்­பெ­ருக்க ஆற்­றல் குறை­தல் போன்ற பாத­க­மான விளை­வு­கள் ஏற்­ப­டு­கின்­றன.

கோழி­க­ளுக்கு எமக்கு இருப்­பது போல் வியர்­வைச் சுரப்பி கிடை­யாது. எனவே தமது அல­கைத் [ வாயை ] திறந்­து­தான் அதி­க­ள­வில் உடல் வெப்­பத்தை அவை வெளி­யேற்­று­கின்­றன. பொது­வாக ஆரோக்­கி­ய­மான கோழிப்­பண்­ணை­க­ளுக்கு அண்­மை­யில் நாம் போகும் பொது அவை தமது அலகை திறந்து சுவா ­சிக்­கும் சத்­தம் கேட்­டுக் கொண்டே இருக்­கும். இது அந்­தப் பண்­ணை­யின் ஆரோக்­கி­யத்­தின் அறி­குறி. நோய்ப்­பட்ட கோழி­க­ளில் மேற்­படி சத்­தம் கேட்­காது அல்­லது சளி கலந்து இழு­வை­யாக கேட்­கும். அத்­து­டன் நோய் கண்ட கோழி­கள் தீவ­னம் உட்­கொள்­ளது சோர்ந்து பக்­க­மாக ஒதுங்கி இருக்­கும்.

இலங்­கை­யின் வடக்கு ,கிழக்கு போன்ற உலர் வல­யப் பகு­தி­களை பொறுத்த வரை, கோடை கால­மாக மார்ச், ஏப்­ரல், மே, ஜூன், ஜுலை, ஓகஸ்ட் போன்ற மாதங்­களை குறிப்­பிட முடி­யும். தென் மாகா­ணம், வட மேல் மாகா­ணங்­க­ளில் ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மாதங்­க­ளில் தென் மேல் பரு­வக்­காற்று மழை கிடைப்­ப­தால் அந்த மாதங்­கள் ஓர­ளவு பசு­மை­யா­னவை. வடக்கு,கிழக்கு பகு­தி­க­ளில் ஒக்­ரோ­பர், நவம்­பர், டிசெம்­பர் மாதங்­கள் மழை கால­மா­க­வும் ஜன­வரி, பெப்­ர­வரி மாதங்­கள் குளிர் கால­மா­க­வும் காணப்­ப­டும். இந்­தக்­கா­லத்­தில் வெப்ப அயர்ச்சி குறை­வா­கவே கோழி­க­ளுக்கு காணப்­ப­டும்.எனி­னும் குளிர் காலப் பிரச்­சி­னை­கள் அந்­தக் காலத்­தில் காணப்­ப­டும். கோழிப் பண்ணை வளர்ப்­பில் மேற்­படி மாதங்­க­ளின் சூழல் வெப்ப நிலை­யைக் கருத்­திற்­கொண்டு சரி­யான மேலாண்மை முறையை அந்­தந்­தப் பகு­தி­க­ளில் கடைப்­பி­டிக்க வேண்­டும்.நான் தொடக்­கத்­தில் இலங்­கை­யில் அண்­மைய வரு­டங்­க­ளில் பெரும்­பா­லும் வரு­டத்­தின் சகல மாதங்­க­ளி­லும் அதி­க­ரித்த வெப்ப நிலை காணப்­ப­டு­வ­தைக் கருத்­திற் கொள்ள வேண்­டும்.

கோழி­க­ளில் வெப்ப அயர்ச்­சி­யின் அறி­கு­றி­கள்

அதி­க­மா­க­வும் வேக­மா­க­வும் மூச்சு விடும்
அதி­க­மாக தண்­ணீர் குடிக்­கும்.
இறக்­கை­களை தளர்­வாக நிலத்­தில் படர்த்­தி­ய­படி இருக்­கும்.
தலை மற்­றும் கொண்­டை­யைத் தண்­ணீ­ரில் அமிழ்த்­தி­ய­படி இருக்­கும்.
குறை­வா­கவே தீவ­னம் எடுக்­கும்.
எடை குறை­யும்,வளர்ச்சி வீத­மும் குறை­யும்.
முட்டை உற்­பத்தி குறை­யும்.
சிறிய, தரக்­கு­றை­வான, ஓடு­கள் நலி­வ­டைந்த தோல் முட்­டை­களை இடும்.

கோழி­க­ளில் வெப்ப அயர்ச்­சி­யைக்
குறைக்­கும் மேலாண்மை முறை­கள்

தீவன மேலாண்மை
• குளிர் காலத்தை விட கோழி­கள் 5–10 வீதம் கோடை காலத்­தில் தீவ­னத்தை குறை­வா­கவே உட்­கொள்­ளும். இத­னால் தேவை­யான எரி­சக்தி , புர­தம், அமினோ அமி­லங்­கள், கனி­யுப்­பு­கள் ,விற்­ற­மின்­கள் போன்ற ஊட்ட சத்­து­கள் குறை­வா­கவே கிடைக்­கும். இத­னால் கோழி­க­ளின் எடை குறை­வ­தோடு முட்டை உற்­பத்­தி­யும் பாதிக்­கப்­ப­டும். எனவே ஊட்­டச் சத்­துக்­களை அதிக அதி­கம் உண­வில் சேர்க்க வேண்­டும் . [ 5–10%]

• அனு­சே­பம் / வளர்­சிதை மாற்­றத்­தின் போது புரத உண­வு­கள் அதி­க­ளவு வெப்­பத்­தினை வெளி விடு­வ­தால் இந்­தக் காலத்­தில் தீவ­னத்­தில் புர­தத்­தின் அளவை கணி­ச­மா­கக் குறைக்க வேண்­டும் .[ 1-1.5%]

• சக்­திக்­காக தீவ­னத்­தில் சேர்க்­கப்­ப­டும் சோளம்,அரிசி குரு­ணல்,தவிடு போன்ற காபோ­ஹை­த­ரேட்/ மாப்­பொ­ருள் உண­வு­கள் அனு­சே­பத்­தின் போது அதிக வெப்­பத்தை வெளி­வி­டு­வ­தால் அதிக வெப்ப அயர்ச்­சியை தரக் கூடி­யன. இத­னால் அதிக வெப்­பம் தராத தாவர எண்­ணெய் போன்­ற­வற்றை சேர்த்து [ அதி­க­ளவு 5%] அந்த சக்­தியை ஈடு செய்­ய­லாம்.

• வெப்ப அயர்ச்­சி­யால் நோய் எதிர்ப்பு சக்தி குறை­வ­டை­வ­தால் விற்­ற­மின் மற்­றும் செலி­னி­யம் சத்­து­களை வழங்­க­லாம். இவை இனப்­பெ­ருக்க பிரச்­சி­னை­களை தீர்க்க வல்­லன.

• முட்டை உற்­பத்­திக்கு பைகா­ப­னைட் [ HCO3] உப பொருள் தேவை. வெப்ப நாள்­க­ளில் கோழி­கள் அதி­க­மாக வாய் மூலம் காப­னீர் ஒட்­சைட் [ Co2] வாயுக்­களை வெளி விடு­வ­தால் தேவை­யான் பை காப­னேட் கிடைக்­கா­மல், முட்டை உற்­பத்தி குறை­வ­டை­வ­தோடு., தரம் குறைந்த தோல் முட்­டை­களை கோழி­கள் இடத் தொடங்­கும். மேலும் அதிக காப­னீர் ஒட்­சைட் வெளி­யே­று­வ­தால் உட­லின் அமில கார சம­நிலை பாதிக்­கப்­பட்டு காரத்­தன்மை அதி­க­ரிப்­ப­தால் நோய் எதிர்ப்பு சக்தி கடு­மை­யா­கக் குறை­வ­டை­யும். இதனை தடுக்க உண­வில் NaHco3 சேர்க்­க­லாம்.[ 1000kg உண­வுக்கு 1.5=2kg NaHco3 ]

• விற்­ற­மின் போன்­றவை வெப்ப அழுத்­தத்தை குறைப்­ப­தால் அவற்றை உண­வில் வழங்­க­லாம். விற்­ற­மின் D ஐ வழங்­கு­வ­தன் மூலம் முட்டை ஓடு சார்ந்த பிரச்­சி­னை­களை குறைக்­க­லாம். கரும்­புச் சாறு போன்­ற­வற்றை பிசைந்து கொடுத்து வழங்­கி­னால் கோழி­க­ளின் உணவு உட்­கொள்­ளுகை அதி­க­ரிக்­கும்.
தண்­ணீர் மேலாண்மை

• அதி­க­தி­க­மாக தண்­ணீர்த் தொட்­டி­களை வைக்க வேண்­டும்.

• சிறிய பண்­ணை­க­ளா­யின் மண் சட்­டி­க­ளில் தண்­ணீர் வைக்­க­லாம். மதிய வேளை­யில் அத­னுள் ஐஸ் கட்­டி­களை போட்டு வைக்­க­லாம்.
• தண்­ணீர்த் தொட்­டி­க­ளின் வெளி மற்­றும் உட்­பு­றத்தை சுண்­ணாம்­பைப் பூசு­வ­தன் மூலம் அவை குளிர்ச்­சி­யாக காணப்­ப­டும். அத்­து­டன் வெள்ளை நிறம் வெப்­பத்­தைப் பிர­தி­ப­லிக்க கூடி­யது.

• மதிய நேரத்­தில் தொட்­டி­க­ளில் உள்ள தண்­ணீர் விரை­வாக வெப்­ப­மா­வ­தால் அடிக்­கடி தண்­ணீரை மாற்ற வேண்­டும். மேலும் தண்­ணீ­ரில் குளுக்­கோஸ் , விற்­ற­மின், கனி­யுப்­பு­களை கலந்து வழங்­கி­னால் இழக்­கப்­ப­டும் மேற்­படி சத்­து­களை ஈடு செய்­ய­லாம்.
• பிளாஸ்­டிக் தண்­ணீர் தாங்­கி­கள் வெப்­ப­மான நேரங்­க­ளில் விரை­வாக வெப்­ப­மா­வ­தால் முடிந்­த­வரை கிணற்­றில் இருந்து நேர­டி­யாக தண்­ணீரை வழங்­கு­வது சிறப்­பா­னது.

கொட்­டகை மேலாண்மை
•கொட்­ட­கையை காணி­யின் உய­ர­மான மற்­றும் காற்­றோட்­டம் மிக்க இடத்­தில் அமைக்க வேண்­டும். கொட்­டகை நீளப் போக்­கில் கிழக்கு மேற்­காக அமைக்­கும் போது நேர­டி­யான சூரிய ஒளி­யின் தாக்­கத்தை குறைக்க முடி­யும்.

•கொட்­ட­கை­களை நிழல் மரங்­களை கொண்ட இடத்­தில் அமைக்­க­லாம். அல்­லாது போனால் நிழல் மரங்­களை கொட்­ட­கையை சூழ நட­லாம். அத்­து­டன் பசு­மை­யான புற்­க­ளை­யும் நட வேண்­டும்.

•கொட்­ட­கை­க­ளின் கூரையை வைக்­கோல் மற்­றும் தென்­னோலை கொண்டு அமைத்­துக் கொள்­ள­லாம். அஸ்­பெஸ்­டாஸ் சீற் மற்­றும் தக­ரம் கொண்டு மேயப்­ப­டும் கூரை­களை வெள்ளை சுண்­ணாம்பு கொண்டு அடிப்­ப­தோடு உட்­புற மற்­றும் வெளிப்­புற சுவர்­க­ளை­யும் சுண்­ணாம்பு மூலம் அடிக்­க­லாம். கூரை­யின் மேல் கொடித் தாவ­ரங்­களை கொண்டு படர விடு­வ­தன் மூலம் வெப்­பத்­தைக் கணி­ச­மாக குறைக்­க­லாம். மேலும் நீர் தெளிப்­பான்­களை கூரை மேல் அமைத்து வெயில் நேரங்­க­ளில் அதன் மூலம் குளிர்ந்த நீரை கூரைத் தெளிக்­க­லாம். உட்­பு­றக் காற்­றோ­டத்­தை­யும் வெப்­பத்­தை­யும் சரி செய்ய தகுந்த மின்­வி­சி­றி­க­ளைப் பாவிக்க வேண்­டும்.

ஈர­மான சாக்­கு­களை மதிய நேரங்­க­ளில் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் வெப்­பக் காற்­றி­னைத் தவிர்க்க முடி­யும். அண்­மைக்­கா­லத்­தில் மிகப் பெரிய வர்த்­தக கோழிப்­பண்­ணை­கள் வெப்­பத்தை வழங்­காத செயற்­கை­யான சுவர்­களை கோழிப் பண்­ணை­க­ளில் பயன்­ப­டுத்­து­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

•கோழிப் பண்­ணை­க­ளின் சுவ­ரின் அக­லம் 25= 30 அடிக்கு அதி­கம் இருக்க கூடாது. அதனை விட அதி­க­ரிக்­கும் போது உட்­புற காற்­றோட்­டம் கணி­ச­மா­கப் பாதிக்­கப்­ப­டும். கொட்­ட­கை­க­ளின் நீளத்தை வச­திக்கு ஏற்ப மாற்­ற­லாம். உய­ர­மும் 12=15 அடி அள­வில் இருக்­க­லாம். மேலும் அதி­க­ரிப்­ப­தால் பெரி­ய­ளவு பயன்­கள் கிடைக்­காது.

நோய் மேலாண்மை
கோடை காலத்­தில் கோழி­கள் தமது நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­மாக இழப்­ப­தால் பல நோய்­கள் ஏற்­ப­டு­கின்­றன.எனவே கோழி­க­ளுக்கு பொது­வாக ஏற்­ப­டும் நோய்­க­ளுக்­கு­ரிய தடுப்பு மருந்­து­களை சரி­யான வயது ,பரு­வத்­தில் வழங்­கு­வது சிறப்­பா­னது.

ரனிக்­கட்[New castle disease] ,கம்­போரா [ Gamboro – infectious bursal disease] மற்­றும் அம்மை [ Fowl pox] நோய்க்­கு­ரிய மருந்­து­களை மருத்­துவ ஆலோ­ச­னை­யின்­படி சரி­யான வழி­க­ளில் வழங்க வேண்­டும். மேலும் பூச்சி மருந்­து­கள் மற்­றும் இரத்­தக் கழிச்­சல் [Coccidiosis] நோய்க்­கு­ரிய மருந்­து­க­ளை­யும் சரி­யான விகித்­தில் வழங்க வேண்­டும். ஏனைய விலங்­கு­களை போல் அல்­லாது கோழி­கள் விரை­வாக நோய் தொற்­றுக்கு உள்­ளா­கி­னால் நூற்­றுக் கணக்­கில் இறக்­க­நே­ரி­டும் [High mortality and morbidity].

எனவே சிறி­ய­ளவு நோய் அறி­கு­றி­கள் தென்­பட்ட உடன் வைத்­தி­யரை நாடு­தல் அவ­சி­யம்.இறந்த கோழி­களை பிரேத பரி­சோ­தனை செய்­ய­வும் வேண்­டும். இதன் மூலம் சரி­யான நோய்­களை கண்­ட­றிந்து விரை­வாக சிகிச்­சையை செய்ய முடி­யும்.பொது­வாக கோழி­க­ளில் பல நோய்­க­ளின் அறி­கு­றி­கள் ஒரே மாதிரி தெரி­யும் என்­ப­தால் அனு­ப­வம் மிக்க கால்­நடை வைத்­தி­யரை அணுகி ஆலோ­ச­னை­யைப் பெற வேண்­டும்.

எனவே கோடை காலத்­தில் கோழி­க­ளில் ஏற்­ப­டும் வெப்ப அயர்ச்­சியை மேற்­கூ­றிய சகல மேலாண்மை முறை­கள் மூலம் சரி­செய்து அவற்­றின் ஆரோக்­கி­யத்தை பேணு­வ­தன் மூலம் அதிக உற்­பத்­தியை பெற­மு­டி­யும்.

 

Dr.எஸ்.கிருபானந்தகுமாரன்
கால்நடை மருத்துவர்
செட்டிகுளம், வவுனியா

 

 

Exit mobile version