செய்திகள் பிரதான செய்தி

கோட்டை – பதுளை இடையில் நாளாந்த ரயில் சேவை

‘தெநுவர மெனிகே’ ரயில் இன்று (02) முதல் கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை வரை நாளாந்த சேவையில் ஈடுபடவுள்ளது.

குறித்த ரயில் இதுவரை காலமும் 2 நாட்களுக்கு ஒரு தடவை மாத்திரமே பதுளை வரை பயணித்ததாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சீனாவிலிருந்து புதிய ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நாட்களில் பரவும் கொரோனா வைரஸ் தொற்றினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

உள்நாட்டு இறைவரி திணைக்களம் பணியாளர்களுக்கு அடுத்த வாரம் ஊக்குவிப்பு கொடுப்பனவு

Tharani

இரவுடன் காெராேனா தாெற்று அதிகமானது!

G. Pragas

நாடாளுமன்றம் நள்ளிரவு கலைகிறது!

G. Pragas