செய்திகள் பிராதான செய்தி

கோத்தாபயவுடன் இணைந்தார் முரளி

கொழும்பு ஷங்க்ரி-லா ஹொட்டலில் இன்று (08) நடந்த வியத்கம இளைஞர் மாநாட்டின் அமர்வில் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கலந்து கொண்டுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவான இந்த அமைப்பின் வருடாந்த மாநாடு இன்று காலை தொங்கியிது. ஏழு அமர்வுகளாக நடந்த இந்த மாநாட்டின் இறுதியில், தனது கொள்கை விளக்கவுரையை கோத்தாபய ஆற்றினார்.

வணிக நம்பிக்கையை உருவாக்குதல், அறிவு பொருளாதாரத்திற்கான கல்வித் துறையை மாற்றுவது, உலகளாவிய போக்குகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கான சவால்கள் மற்றும் ஒழுக்கமான மற்றும் வளர்ந்த ஜனநாயகத்தை இலங்கை விரைவாகப் பின்தொடர்வதில் இளைஞர்களின் பங்கு உள்ளிட்ட தலைப்புக்களில் அமர்வுகள் இடம்பெற்றன. இந் நிகழ்விலேயே முத்தையா முரளிதரனும் கலந்து கொண்டிருந்தார்.

Related posts

எம்சிசி தலைமைப் பதவியை பொறுப்பேற்றார் சங்கா

G. Pragas

பணம் பெற்று மரண தண்டனைக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டதா?

G. Pragas

சுதந்திர கட்சி – பெரமுனவின் ஒப்பந்தம் கைச்சாத்தானது

G. Pragas

Leave a Comment