செய்திகள் பிரதான செய்தி

கோத்தாபயவுடன் பேசிய மோடி – பேசியவை என்ன?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இது குறித்து ட்டுவிட் செய்துள்ள மோடி,

“கோத்தாபயவின் தலைமையில் கொரோனவை எதிர்த்து இலங்கை திறம்பட போராடுகிறது. தொற்று நோய் மற்றும் பொருளாதார தாக்கத்தை கையாள இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கும்” – என்றுள்ளார்.

இதேவேளை இதன்போது கொரோனா வைரஸ் ஒழிப்பு செயற்பாடுகள் குறித்தும் இந்த விடயத்தில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் இந்தியாவின் முதலீட்டுப் பணிகள் இதர வர்த்தக செயற்பாடுகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

Related posts

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க கோரி துண்டுப் பிரசுரம்; இருவர் கைது!

reka sivalingam

அரசியல் இலாபங்களை கருத்திற் கொண்டு செயற்படக் கூடாது…!

Tharani

வீடமைப்புத் திட்டம் – பணிகளை பூரணப்படுத்துமாறு பிரதமர் பணிப்பு!

Tharani