செய்திகள் பிந்திய செய்திகள் மன்னார்

கோத்தாபய குறித்து பொய்ப் பிரச்சாரம் முன்னெடுப்பாம் – கூறுகிறார் டிலான்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு எவ்விதமான பிழைகளையும் செய்ய மாட்டார் என்று கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.செல்வகுமரன் டிலான் தெரிவித்தார்.

நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இதனை குறிப்பிட்டார். மேலும்,

தமிழர்களின் நினைவேந்தலை தடுத்து நிறுத்துவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பாக ஒரு சில ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிடுகின்றன.

குறித்த செய்தியானது உண்மைக்கு புறம்பானது. குறித்த செய்தியை கண்டிக்கின்றோம். அந்த ஊடகங்களின் பின்னணியில் அரசியல் தலையீடுகள் இருக்கின்ற காரணத்தினால் தமிழ் மக்கள் மத்தியில் தவறான ஒரு கருத்தை கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர் – என்றார்.

Related posts

உணர்வெழுச்சியுடன் அளம்பில் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்

G. Pragas

ராஜிதவுக்கு பிடியாணை!

G. Pragas

ஆடையகத்தில் தீப்பரவல்!

G. Pragas