கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

கோத்தாபய வெல்வது உறுதியாம்: சொல்கிறார் கருணா

“தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த மைத்திரி, ரணில் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. குறிப்பாக சொல்லப் போனால் 134 அரசியல் கைதிகள் தற்போது சிறையில் உள்ளனர். ஆனால் ஒரு கைதியினைக் கூட மைத்திரி விடுதலை செய்யவில்லை. மஹிந்த ராஜபக்ச அரசினால் களத்தில் இருந்து நேரடியாக வந்த 12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வளித்து விடுவிக்கப்பட்டனர்”

இவ்வாறு தமிழர் ஜக்கிய சுதந்தர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இன்று (08) மட்டக்களப்பு கிரான் பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் தமது கட்சி அலுவலகத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

இன்று தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ் அரசிற்க்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழர்களுக்கு எதுவிதமான நன்மையும் கிடைத்ததில்லை. இதில் ஒரு மாற்றத்தினை கொண்டுவரும் நோக்கில் மஹிந்த ராஜபக்சவினால் கொண்டு வரப்பட்ட கோத்தாபய ராஜபக்சவினை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.

வெற்றி என்பது நிச்சயம். இன்று ரணில் விக்ரமசிங்க பெரும் குழப்பத்தில் உள்ளார். தான் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது சஜித் போட்டியிடுவதா என்ற குழப்பத்தில் உள்ளார். சஜித் வந்து என்னத்தை செய்வார். அவரது தந்தை கடந்த காலத்தில் புரிந்த வன்முறைகளை தெரியுமா. இப்போதைய இளைஞர்களுக்கு எதுவும் புரியாது. சஜித் என்றவுடன் அவர்களுக்கு ஒரு மோகம். அவர் மட்டக்களப்பில் 500 வீடுகளைக் கூட கட்டிக் கொடுக்கவில்லை.

எங்களது ஆட்சியில் 5000 வீடுகளை கட்டிக் கொடுத்தோம். அதில் பயனாளிகள் எதுவித பணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் சஜித் கொண்டு வந்த வீட்டிற்கு மக்கள் 2 இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் – என்றார். (கு)

Related posts

மின்சார பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை!

Tharani

அமைதியாக இருக்க கோரியதால் நடந்த கொலை!

G. Pragas

இந்தியா தீர்வு தர வேண்டும் என்பதில் உடன்பாடில்லை; எம்மிடமே தீர்வு உண்டு!

G. Pragas