செய்திகள் பிரதான செய்தி

கோத்தாவின் நிகழ்வில் சில ஊடங்களுக்கு அனுமதி மறுப்பு

கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியிட்டில் பத்திரிகையாளர்கள் மீது கெடுபிடி பிரயோகிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இன்று (25) தாமரைத்தடாக அரங்கில் நடைபெற்ற தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் தமக்கு ஆதரவான பத்திரிகையாளர்களை மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரமுன தரப்பை கேள்வியெழுப்பும் ஊடகங்கள் அரங்கிற்கு உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.

சண்டே ஒவ்சேவர் பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவருக்கும் முன்னதாக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி எனக் குறிப்பிட்டு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக குறித்த ஊகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

எனினும், நேற்று (24) குறித்த கட்சியை சேர்ந்த சரத் அமுனுகம அனைத்து ஊடகங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதன்போது பதிவு செய்யப்பட வேண்டும் என அவரால் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் பர்ஸ்ட் லுக்

Bavan

தந்தையின் குடியால் உயிரை விட்ட மகள்!

G. Pragas

காலநிலை தாக்கத்தை கட்டுப்படுத்தல்

Tharani