செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

கோத்தாவே வெளியேறு நேற்று யாழில் போராட்டம்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் யாழ்ப்பாணம் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று (28) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் எதிர்கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இந்நிலையில் கிட்டு பூங்கா முன்பாக ஒன்று திரண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோத்தாபயவின் வருகைக்கு எதிர்பினை வெளியிட்டு “வெள்ளைவான் முதலாளி கோத்தாவே வெளியேறு” எனத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன் போது “காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே?, எமது மக்களை கடத்தாதே, ஐ.நா அமைதிப்படையே வா, சர்வதேச நீதிமன்றில் நிறுத்து, கோட்டாவை கைது செய், பக்கச்சார்பற்ற விசாரணையை நடாத்து உள்ளிட்ட பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொக்குவில் விபத்தில் இருவர் படுகாயம்!

G. Pragas

சிக்ஸ்ஸர்களினால் அடித்து நொருக்கிய ஸ்கொட்லாந்து வீரர்

G. Pragas

வவுனியாவில் மின்னியலாளர்களுக்கு தொழில்துறை உரிமம் குறித்த விழிப்புணர்வு

Tharani