செய்திகள் பிராதான செய்தி

கோத்தாவை இலங்கையராக அங்கீகரிக்க கூடாது – மனு

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்க கூடாது எனக் கோரி தாக்கல் செய்த மனு இன்று (30) மேன் முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த மனுவை சிவில் ஆர்வலர்களான காமினி வியாங்கொட மற்றும் சந்திரகுப்தா தெனுவர ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

இதன்போது மனுவை விசாரணைக்கு எடுப்பது குறித்து எதிர்ப்பு உள்ளதா என்று நீதிபதிகள் கேட்ட போது கோத்தாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச சார்பிலான சட்ட ஆலோசகர்கள் எந்த எதிர்ப்பும் இல்லை என்று மன்றில் தெரிவித்துள்ளனர்.

இதன்படி குறித்த மனுத் தொடர்பில் இடைக்கால உத்தரவு வழங்கும் விசாரணை ஒக்டோபர் (02), (03) திகதிகளில் மூன்று நீதிபதிகள் குழு முன்னால் இடம்பெறும் என்று மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts

சிறையில் கைபேசி பாவனையை நிறுத்த நடவடிக்கை

G. Pragas

40 தங்கப் பிஸ்கட்களுடன் விமான நிலைய ஊழியர் கைது!

G. Pragas

மகனுடன் நடித்த தமன்னாவுடன் நடிக்க ஆசைப்பட்ட தந்தை

G. Pragas

Leave a Comment