செய்திகள் பிராதான செய்தி

கோத்தாவை எதிர்த்து சுமங்கல தேரர் உண்ணாவிரதம்

கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமையை உறுதிப்படுத்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இங்குருவத்தே சுமங்கல தேரரினால் கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் இன்று (10) காலை முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பாக 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரியே இந்த உண்ணாவிரத போராட்டத்தினை அவர் முன்னெடுத்துள்ளார்.

அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் புதிய பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷவின் பெயர் இதுவரை உள்ளடக்கப்படவில்லை.

எனினும், கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையினை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

33வது மாடியில் இருந்து வீழ்ந்தவர் பலி!

G. Pragas

தியாக தீபத்தின் நினைவேந்தலை மாநகர சபையே முன்னெடுக்கும்

G. Pragas

இலங்கையில் மூடப்படும் 02 இந்திய வங்கிகள்

Tharani

Leave a Comment