செய்திகள் பிரதான செய்தி

கோத்தா பேரணிக்கு சென்ற பெண் மீது வன்புணர்வு; பொலிஸார் மீது நடவடிக்கை

கேகாலையில் நேற்று (07) இடம்பெற்ற கோத்தாபய ராஜபக்சவின் பேரணியில் கலந்து கொண்டு வீடு திரும்பிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்ந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்காத ஹேமத்கம பொலிஸ் நிலையப் பொலிஸார் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்னர்.

பலவத்கமயில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட குறித்த மன நலம் பாதிக்கப்பட்ட 26 வயதுடைய யுவதி வீட்டுக் திரும்பிச் செல்லும் வழியில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பெண்ணின் தந்தையால் செய்யப்பட்ட முறைப்பாடு அழுத்தம் காரணமாக வாபெஸ் பெறப்பட்டது.

இந்நிலையிலேயே சம்பவத்தை மறைக்க முயன்று நடவடிக்கை எடுக்கத் தவறிய ஹேமத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பாதிகாரி உட்பட பொலிஸார் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

வன்புணர்வுச் சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

உள்நாட்டு இறைவரி திணைக்களம் பணியாளர்களுக்கு அடுத்த வாரம் ஊக்குவிப்பு கொடுப்பனவு

Tharani

ரஜினின் மருமகனின் பாஸ்போர்ட்டைக் காணோம்

G. Pragas

யால பூங்காவிற்கு செல்ல மின்னணு நுழைவுச்சீட்டு

reka sivalingam