செய்திகள் பிரதான செய்தி

கோர விபத்தில் தாயும் பிள்ளைகளும் பலி!

கம்பஹா – வெயாங்கொடை பகுதியில் இன்று (12) மாலை முச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்டதில் தாய், பிள்ளைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகள் உள்ளிட்ட நால்வருடன் பெண் ஒருவர் செலுத்தி சென்ற முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி புரண்டு விபத்துக்கு உள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திய பெண் (40-வயது), அவரது 9 மற்றும் ஒன்றரை வயதுடைய பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

கன்னியா மலையில் இராவணனின் தாயின் சமாதி; ஆய்வில் தகவல்!

Bavan

சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஷ்கரிப்புக்கு திட்டம்

Tharani

சுற்றுலா தொழிற்துறை அபிவிருத்திக்கு பிரச்சாரம்

Tharani