செய்திகள்

கௌதாரிமுனைக் கொலை, பெண் உட்பட மூவர் கைது!

பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 28 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய இருவரும் 54 மற்றும் 34 வயதுடையவர்கள்.

சம்பவத்துடன் தொடர்புடைய சான்றுப் பொருளாக படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்க யாழ்ப்பாணப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை பகுதியிலிருந்து கௌதாரி முனைப்பகுதிக்கு நேற்றுமுன்தினம் சுற்றுலாசென்ற குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியை சேர்ந்த ரஞ்சன் நிரோஷன் (வயது – 22) என்ற இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர். குறித்த பகுதிக்கு சுற்றுலாவாக 17 பேர் கொண்ட குழு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,195