கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

சங்காபிஷேகமும் பால்குட பவனியும்

வாழைச்சேனை முறாவோடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு 1008 சங்காபிஷேகமும், பால்குட பவனியும் நேற்று (13) இடம்பெற்றது.

இப்பால்குட பவனியானது வாழைச்சேனை சுங்கான்கேணி வலம்புரி விநாயகர் ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று ஆரம்பமாகி சுங்கான்கேணி வீதி, கிண்ணையடி பாடசாலை வீதி வழியாக கிண்ணையடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் சென்று அங்கிருந்து முறாவோடை வீதி வழியாக முறாவோடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தினை வந்தடைந்தது.

இதன்போது அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடனம், கோலாட்டம், கிராமிய வாத்தியங்கள் முழங்க பெருந்திரளான பெண்கள் தலையில் பால் குடமேந்தி தங்களுடைய வேண்டுதலை வேண்டி கலந்து கொண்டனர்.

முறாவோடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சங்காபிஷேக பூசை உட்பட்ட பூசைகள் யாவும் வேதாகம வித்தியாபதி, ஷாஹித்ய பாஸ்கரன் ஷப்த ரிஷி குரு பீடாதிபதி தேசமான்ய சிவஸ்ரீ குமார விக்னேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த முறாவோடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயமானது தமிழ், முஸ்லிம் பிரதேச எல்லையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விசுவமடுவில் மாபெரும் மாட்டுவண்டிச் சவாரி!

Bavan

படகு கவிழ்ந்து ஒருவர் பலி! இருவரை காணவில்லை!

G. Pragas

சஜித் கூட்டணியின் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கோரும் நடவடிக்கை நாளை

Tharani