கிழக்கு மாகாணம் செய்திகள்

சஜித்தின் பிரச்சாரத்திற்கு சென்று திரும்பியவர் மரணம்!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு சென்ற குழுவினரில் ஒருவர், தான் பயணித்து கொண்டிருந்த பேருந்திலிருந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (10) நடைபெற்ற இந்த சம்பவத்தில் திருகோணமலை, தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளரே உயிரிழந்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு திருகோணமலை மாவட்டம் சேருவில தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் அருண் சிறிசேனவின் தலைமையில் சென்ற குழுவினரில் ஒருவர், தான் பயணித்து கொண்டிருந்த பேருந்திலிருந்து விழுந்ததில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்தவர் மதுபோதையில் இருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

வீட்டுத் திட்டம் முழுமையாகாததால் வெள்ளத்தில் தவிக்கும் மக்கள்

கதிர்

மரண தண்டனை நிறைவேற்றும் தடை நீடிப்பு!

G. Pragas

மாணவன் மீது துஷ்பிரயோகம்! ஆசிரியை கைது!

G. Pragas

Leave a Comment