செய்திகள்

சஜித் மோசடி செய்தார் – சிகிரியா அலுவலக பணியாளர்கள் போராட்டம்!

2019ம் ஆண்டு அலுவலகப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முற்பணத்தை வழங்குமாறு கோரி மத்திய கலாசார நிதியத்தின் அணி கிரியா திட்ட அலுவலகப் பணியாளர்கள் இன்று  (26) சிகிரியா பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடயத்துக்குப் பொறுப்பான முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸாவால் மத்திய கலாசார நிதியத்தின் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதால் இன்று நிதியத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதென, ஆர்ப்பாட்டக்காரர்கள்  தெரிவித்தனர்.

எனவே பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலையீடு செய்து குறித்த நிதியைப் ​பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஐக்கிய பொது சேவை சங்கத்தின் செயலாளர் ஜீ.நிலந்த அஜித், சஜித் பிரேமதாஸ அமைச்சராகப் பதவி வகித்த போது மத்திய கலாசார நிதியத்தின் நிதி  ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் இதனால் புதிய கொடுப்பனவு முறைக்கு அமைய பணியாளர்களுக்கு கொடுப்பனவை வழங்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts

மீனுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

Tharani

தினம் ஒரு திருக்குறள் (12/1-ஞாயிறு)

Bavan

ஹப்புத்தளை விமான விபத்து குறித்த இடைக்கால அறிக்கை கையளிப்பு

reka sivalingam

Leave a Comment