செய்திகள் பிராதான செய்தி

சஜித் பிரச்சாரத்தில் புலிகளின் பாடல் – ஒருவர் கைது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கூட்டமைப்பின் இறுதி பிரசார கூட்டம் இன்று (13) மாலை 3 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்கள் எவரும் குறித்த நேரத்திற்கு வருகை தராமையினால், ஏற்பாட்டாளர்களின் வேண்டுகோளின்படி விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல் திடீரென ஒலிபரப்பு செய்யப்பட்டது.

இதன்போது கல்முனை பொலிஸாருக்கு குறித்த விடயம் அறிவிக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த பொலிஸார், சந்தேகத்தில் குறித்த கூட்டத்திற்கு ஒலிபரப்பு ஒழுங்குகளை மேற்கொண்ட இளைஞனை கைது செய்தனர்.

Related posts

எனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை! சஜித்

G. Pragas

நேர்மையான அரச அதிகாரிகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு

Tharani

ரவிகரனின் தொடர்பகத்தில் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல்

G. Pragas

Leave a Comment