செய்திகள் பிந்திய செய்திகள்

சஜித் வெற்றியில் மலையக மக்களின் நிம்மதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெற்றால்தான் மலையக மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டனில் நேற்று (19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,

மலையகத்திலுள்ள தலைவர் ஒருவர் கூறுகிறார், இங்குள்ள மக்களுக்கு வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டு கிராமங்கள் அமைக்க அவர் நினைத்திருந்ததாகவும் அவை அனைத்தையும் நான் இல்லாமல் செய்ததாகவும் கூறுகிறார். ஆனால் நாங்கள் வந்த பின்னர்தான் மலையக மக்களுக்கு தனி வீட்டுத்திட்டம், காணி உறுதிபத்திரம், அதிகாரசபை பிரதேச சபை அதிகரித்தல் என பலவற்றை பெற்று கொடுத்துள்ளோம்.

அந்தவகையில் இத்தகையவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி அவர்களை ஏமாற்றுவதற்கு முனைகின்றனர். மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 5000 ரூபாயை கேட்டிருந்தேன். அதற்கு ஆதரவு வழங்குவதாக கூறிவிட்டு தேர்தல் ஆணையாளரிடம் சென்று முறைபாடு ஒன்றினை செய்து அதனை இல்லாமல் செய்துவிட்டார்கள்.

எனவே சஜித் பிரேமேதாச வெற்றிபெற்றால் மாத்திரமே எமது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும் – என்றார்.

Related posts

மேலதிக வகுப்புக்களுக்கு செல்லாத மாணவனுக்கு 197 புள்ளிகள்

G. Pragas

இது பௌத்த நாடு – ஆனந்த

G. Pragas

விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

G. Pragas

Leave a Comment