செய்திகள் பிந்திய செய்திகள்

சடலத்துடன் காணாமல் போன தந்தை – மகன்; தீவிர விசாரணை

நுவரெலியா – வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டவீன் விக்கடன் தோட்ட பகுதியில் கடந்த 09ம் திகதி ராகை (70-வயது) என்ற தாயின் சடலத்துடன் காணாமல் போன மகன் மற்றும் பேரபிள்ளை தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் நே ற்று (11) ஆரம்பித்துள்ளனர்.

வட்டவளை பொலிஸ் நிலையத்தில் விக்டன் தோட்ட மக்கள் செய்த முறைபாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட வட்டவளை பொலிஸார் குறிப்பிடுகையில், குறித்த தோட்ட பகுதியில் வசித்து வந்த ஏழுபது வயதுடைய ராகை என்ற தாயே சுகயீனம் காரணமாக வீட்டில் இருந்தார் என்றனர். அத்துடன் குறித்த தாயினது மகனின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்த வந்தாகவும் இரண்டு வருடங்களின் பின் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனது மாமியார் சுகயீனம் காரணமாக 09ம் திகதி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் தனது மகனும், கணவரும் இணைந்து சடலத்தை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றதாகவும் இதுவரையிலும் சடலத்தை எங்கு கொண்டு சென்றனர், என்ன செய்தார்கள் என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் இவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என உயிரிழந்தவரின் மகனின் மனைவியால் வட்டவளை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன், காணாமல் போன சடலத்தையும் மகன் மற்றும் பேரபிள்ளையையும் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் தேடி வருகின்றனர்.

Related posts

அனர்த்த மீட்பு பணிகளில் கடற்படை

G. Pragas

குருதித்தான முகாம்

G. Pragas

சாயி பகவானின் 94வது ஜனன தினம்

G. Pragas

Leave a Comment